மன்னார் பிரதான பாலத்தில் உள்ள மின் விளக்குகள் இரவில் ஒளிர்வதில்லை - இரவு நேரத்தில் விபத்துக்கள் அதிகரிப்பு.
மன்னார் பிரதான பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள அதியுயர் மின் விளக்குகள் இரவு நேரங்களில் ஒளிராதமையினால் குறித்த பாலத்தில் நாளாந்தம் விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
-மன்னார் பிரதான பாலத்தில் சுமார் 7 அதியுயர் மின்கம்பங்களில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.அதில் இரண்டு மின் விளக்குகள் மாத்திரமே தற்போது ஒளிர்கின்றது.சில நேரங்களில் அதுவும் ஒளிர்வதில்லை.
இதனால் இரவு நேரங்களில் விபத்துக்கள் ஏற்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.சில நேரங்களில் கழுதைகள் வீதியைக்கடக்க முற்படுகின்ற போதும் இவ் விபத்துக்கள் ஏற்படுகின்றது.
-மன்னார் நகர சபையின் பூரண கட்டுப்பாட்டில் உள்ள குறித்த மின்விளக்குகளுக்கு மன்னார் நகர சபை மாதந்தம் மின் பட்டியலுக்கான கொடுப்பணவை மன்னார் மின்சார சபைக்கு வழங்கி வருகின்றது.
எனினும் தொடர்ச்சியாக குறித்த மின்விளக்குகள் செயலிழந்து காணப்படுகின்ற நிலையில் மன்னார் நகர சபை அதிகாரிகளும்,மின்சார சபை அதிகாரிகளும் கண்டும் காணாதவாறு நடந்து கொள்வதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
எனவே குறித்த பாலத்தில் உள்ள அனைத்து மின் விளக்குகளையும் ஒளிரச் செய்து மக்களை இரவு நேர விபத்துக்களில் இருந்து பாதுகாக்குமாறு மன்னார் மக்களும்,சமூக ஆர்வலர்களும் உரிய தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார் பிரதான பாலத்தில் உள்ள மின் விளக்குகள் இரவில் ஒளிர்வதில்லை - இரவு நேரத்தில் விபத்துக்கள் அதிகரிப்பு.
Reviewed by NEWMANNAR
on
July 25, 2014
Rating:
No comments:
Post a Comment