மடு அன்னையின் ஆவணித்திருவிழா தொடர்பில் மன்னார் அரச அதிபர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்
மடு அன்னையின் வருடாந்த ஆவணித்திருவிழா தொடர்பான முதலாவது ஆலோசனை கலந்துரையாடல் நேற்று புதன் கிழமை மாலை மன்னார் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலமையில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயேப்பு யோசேப்பு ஆண்டகை,மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை மடுத்திருத்தல பரிபாலகர் அருட்தந்தை எமிளியான்ஸ் பிள்ளை மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ். குனவர்த்தன ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
எதிர்வரும் ஆவனி 15ம் திகதி இடம்பெற இருக்கும் மடு அன்னையின் வருடாந்த திருவிழாவிற்கு தேவையான முன்னேற்பாடுகள் குறித்து குறித்த கலந்துரையாடலில் ஆலோசிக்கப்பட்டிருப்பதாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை தெரிவித்திருக்கின்றார்.
குறிப்பாக மேற்படி கலந்துரையாடலில் சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதாகவும் அதில் போக்குவரத்து, மின்சாரம், குடிநீர், சுகாதாரம், பாதுகாப்பு, உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
மடு அன்னையின் ஆவணித்திருவிழா தொடர்பில் மன்னார் அரச அதிபர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்
Reviewed by NEWMANNAR
on
July 25, 2014
Rating:

No comments:
Post a Comment