பலஸ்தீன காஸா பிராந்தியத்தில் இஸ்ரேல் உக்கிர ஷெல் தாக்குதல்
பலஸ்தீன - காஸா பிராந்தியத்தில் இஸ்ரேல் சனிக்கிழமை இரவு நடத்திய உக்கிர ஷெல் தாக்குதல்களில் குறைந்தது 40 பேர் பலியானதுடன் 400 பேருக்கும் அதிகமானோர் காய
மடைந்துள்ளனர்.
இந்நிலையில் மேற்படி ஷெல் தாக்குதல்கள் ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்துள்ளன. இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை ஷியேயா பிரதேசத்திலுள்ள சிரேஷ்ட ஹமாஸ் அதிகாரியான காலில் அல்--ஹேயாவின் வீட்டை இலக்கு வைத்து நடத்திய ஷெல் தாக்குதலில் அவரது மகன், மருமகள் மற்றும் இரு சிறுவர்கள் உட்பட 4 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் அன்றைய தினம் அந்தப் பிரதேசத்தில் இடம்பெற்ற ஷெல் தாக்குதல்களில் பலஸ்தீன புகைப்படக்கலைஞர் காலெத் ஹம்மாட் துணை மருத்துவ உத்தியோகத்தர் புவாத் ஜபார் ஆகியோர் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேற்படி புகைப்படக்கலைஞரும் துணை மருத்துவ உத்தியோகத்தரும் பயணித்த அம்புலன்ஸ் வண்டி மீதே தாக்குதல் இடம்பெற்றுள்ளது.அவர்கள் இருவரும் தாக்குதல்களில் காயம
டைந்தவர்களை மருத்துவமனைக்குச் கொண்டு செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக பிராந்திய அவசர சேவைகள் பேச்சாளர் அஷ்ரப் அல்--கட்ரா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கட்டாருக்கு விஜயம் செய்யவுள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ,பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸை சந்தித்து பிராந்திய பதற்ற நிலை குறித்து கலந்து
ரையாடவுள்ளார்.
இஸ்ரேலியர்களுக்கும் பலஸ்தீனர்களுக்குமிடையிலான வன்முறை மோதல்களை முடிவுக்குக் கொண்டு வரும் முகமாக அந்தப்பிராந்தியத்துக்கான பயணத்தை பான் கீ மூன் மேற்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கிறது.
கடந்த 8 ஆம் திகதி ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையை இஸ்ரேல் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை 350க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் பெருமளவானோர் பொதுமக்கள் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கிறது.
இஸ்ரேலிய பாதுகாப்பு படையானது கடந்த வியாழக்கிழமை காஸா பிராந்தியத்துக்கு தரைவழி படையினரை முதன்முதலாக அனுப்பியிருந்தது.இந்நிலையில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான தரை வழித் தாக்குதல்களை விரிவுபடுத்தியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
எல்லைப் பிராந்தியத்திலான சுரங்கங்களைப் பயன்படுத்தி இஸ்ரேலுக்குள் ஊடுருவிய பலஸ்தீன போராளிகளுக்கும் இஸ்ரேலியப் படைவீரர்களுக்குமிடையே சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சமரில் இரு இஸ்ரேலிய படைவீரர்கள் பலியானார்கள்.
இந்நிலையில் காஸாவிலுள்ள பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ள 50,000 க்கு மேற்பட்ட பலஸ்தீனர்கள் உதவி விநியோகங்கள் தொடர்பில் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. காஸாவின் எகிப்திய மற்றும் இஸ்ரேலிய எல்லைகளுக்கு அருகில் பெருமளவான மக்கள் இடம்பெயர்வு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் அதிகாரி கூறினார்.
இந்நிலையில் இஸ்ரேல் -- காஸாவுக்கு இடையில் யுத்த நிறுத்தமொன்றை முன்னெடுப்பதற்காக எகிப்து, கட்டார், பிரான்ஸ் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிகள் முன்னேற்றத்தை எட்டத் தவறி யிருந்தன.
அதேசமயம் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்ஜமின் நெட்டான்யாஹுவுடன் சனிக்கிழமை சந்திப்பை மேற்கொண்ட பிரான்ஸ் வெளிநாட்டு அமைச்சர்,யுத்த நிறுத்தமொன்றுக்கான இணக்கப்பாட்டை எட்டுவதற்கான தனது முயற்சி தோல்வியடைந்துள்ளதாக கூறினார்.
கட்டாரில் பலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள பான் கீ மூன் குவைத், எகிப்து, இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.
பலஸ்தீன காஸா பிராந்தியத்தில் இஸ்ரேல் உக்கிர ஷெல் தாக்குதல்
Reviewed by NEWMANNAR
on
July 21, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 21, 2014
Rating:


No comments:
Post a Comment