அண்மைய செய்திகள்

recent
-

14 வருடங்களின் பின்னர் நாட்டில் மோசமான நீர்த் தட்டுப்பாடு

14 வருடங்களின் பின்னர் ஏற்பட்டுள்ள மிக மோசமான நீர்த் தட்டுப்பாட்டினால் பல மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அம்பாறை, திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.


 ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில், வீரவில வாவி, லுணுகம்வெகர வாவி, திஸ்ஸவாவி மற்றும் யோத வாவி என்பவற்றின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளமையினால் பிரதேச மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். பொலன்னறுவையில் நிலவும் வரட்சி காரணமாக பராக்கிரம சமுத்திரம், கிரிதலே, மின்னேரியா மற்றும் கவுடுல்ல ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளது. 

 ஒரு இலட்சத்து 10,000 ஏக்கர் கனஅடி நீர் கொள்ளவைக் கொண்ட பராக்கிரம சமுத்திரம் கடந்த டிசம்பர் மாதம் நிரம்பி வழிந்த போதிலும் தற்போது அதன் நீர்க் கொள்ளளவு 48,800 ஏக்கர் கன அடியாக குறைவடைந்துள்ளது. இங்கு நிலவும் நிலவும் வரட்சி காரணமாக 40,585 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 916 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொனராகலை மாவட்டத்தில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் முதுகன்தியன நீர்த்தேக்கத்தின் நீர் மட்டமும் குறைவடைந்துள்ளது.
14 வருடங்களின் பின்னர் நாட்டில் மோசமான நீர்த் தட்டுப்பாடு Reviewed by NEWMANNAR on July 25, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.