நாடளாவிய ரீதியில் வைத்தியசாலை சிற்றூழியர்கள் பணி பகிஷ்கரிப்பு
ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் பொது மற்றும் போதனா வைத்தியசாலைகளின் சிற்றூழியர்கள் இன்று நான்கு மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டனர்.
கோரிக்கைகளை வெற்றிக் கொள்வதற்காக முன்னெடுக்கப்ட்ட 8 நாள் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் பின்னரே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டள்ளது.
6/2006 சுற்றறிக்கையை உடனடியாக செயற்படுத்தல் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.
வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினால் தேசிய வைத்தியசாலையின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
சிற்றூழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் நோயாளர்களை வாட்டுகளுக்கு அவர்களது உறவினர்களே கொண்டுச் சென்றனர்.
களுத்துறை பொது வைத்தியசாலை, கராப்பிட்டிய மற்றும் பேராதனை போதனா வைத்தியசாலைகளிலும் இவ்வாறான நிலையே காணப்பட்டது.
தேசிய வைத்தியசாலைக்கு முன்னாள் ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்தியாக்கிரகப் போராட்டம் இடம்பெறும் நிலையிலேயே இந்த 4 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாடளாவிய ரீதியில் வைத்தியசாலை சிற்றூழியர்கள் பணி பகிஷ்கரிப்பு
Reviewed by NEWMANNAR
on
July 22, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 22, 2014
Rating:


No comments:
Post a Comment