அண்மைய செய்திகள்

recent
-

சுட்டு வீழ்த்தப்பட்ட MH17 விமானத்தின் பின்னால் பயணித்த மோடியின் விமானம்

சுட்டு வீழ்த்தப்பட்ட மலே­சிய ஏயார்லைன்ஸ் நிறு­வ­னத்­திற்குச் சொந்­த­மான MH17 பய­ணிகள் விமானத்திற்குப் பின்னால் சிறிது நேரம் கழித்து அதே வான்வழியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பயணித்த விமானமும் சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் மலேசிய எயார்லைனர் விமானம் MH17 நேற்று (17) இரவு சுட்டுத் வீழ்த்தப்பட்டது.

அதில் பயணித்த 298 பேரும் பரிதாபகரமாக உயி­ரி­ழந்தனர். பிரதமர் நரேந்திர மோடி தனது பிறிக்ஸ் கூட்டத்தொடரை முடித்துவிட்டு பிரேசிலில் இருந்து புறப்பட்டு அவ் வழியால் பயணித்துள்ளார். குறித்த மலேசிய விமானம் ஏவுகணை தாக்குதலில் வீழ்த்தப்பட்டிருக்காவிட்டால் சம்பவம் நடந்த பகுதி வழியாகவே பிரதமர் மோடி பயணித்த எயர் இந்தியா - 001 விமானமும் சென்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 உக்ரைன் - ரஷ்யா எல்லையில் இருந்து 40 கி.மீ தொலைவில் டோரெஸ் எனும் இடத்தில் MH17 விமானம் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானது. இது பற்றி கருத்து தெரிவித்த விமான அதிகாரி ஒருவர், சுட்டு வீழ்த்தப்பட்ட MH17 சென்ற அதே வான்வழியாகவே பிரதமர் மோடியின் விமானமும் சென்றிருக்கும். ஆனால், குறித்த விமான ஓட்டுனர் சாதுரியமாக யோசித்து பயணத்தை மாற்றியிருக்கிறார் என்றார். 

 298 பேருடன் சென்ற மலேசிய விமானம் உக்ரைனில் நேற்று வியாழக்கிழமை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டு விமானத்தில் இருந்த 283 பயணிகளும், 15 ஊழியர்களும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
சுட்டு வீழ்த்தப்பட்ட MH17 விமானத்தின் பின்னால் பயணித்த மோடியின் விமானம் Reviewed by NEWMANNAR on July 18, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.