அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் 30 பிரதான போதைப் பொருள் விற்பனையாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

ஹெரோயின் போதைப் பொருளை வெளிநாடுகளில் இருந்து மொத்தமாக இறக்குமதி செய்து, இலங்கைக்கு விநியோகித்து வரும் 30 முக்கிய போதைப் பொருள் வர்த்தர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் டுபாய், இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் இருந்தவாறு இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

 இதனை தவிர சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரதான போதைப் பொருள் விற்பனையாளர்கள் தமது சகாக்களை பயன்படுத்தி போதைப் பொருள் விற்பனை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது. வேலே சுதா என அழைக்கப்படும் கம்பொல விதானகே சமந்த குமார மற்றும் மொஹமட் வகிம் மொஹமட் சித்திக் ஆகிய இரண்டு பேரே இலங்கையின் ஹெரோயின் வர்த்தகத்தின் பிரதான நபர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 இவர்கள் இருவரும் பாகிஸ்தான் மற்றும் டுபாய் நாடுகளில் இருந்தவாறு தமது சகாக்களை பயன்படுத்தி பாரிய அளவு போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த இரண்டு போதைப் பொருள் வியாபாரிகளுக்கு மேலதிகமான தெமட்டகொட சமிந்த , பரவி சுதா , கொட்ட காமினி , கிம்புலாஹெலே குணா , தெல் பாலா , ஜப்பான் சூட்டி , லாலித்யா , பொடி கண்ணா , தொட்டலங்க நவுஷாட் , வசந்த மெண்டிஸ் , எராஜ் , மெண்டிஸ் , ரத்கம விதுர , ஜேசுதாசன் ஆகிய போதைப் பொருள் விற்பனையாளர்கள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 இந்த போதைப் பொருள் விற்பனையாளர்களை கைது செய்வதற்காக பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கையில் 30 பிரதான போதைப் பொருள் விற்பனையாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் Reviewed by NEWMANNAR on July 26, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.