கோர விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர் - படங்கள்
கோரமான வீதி விபத்திலிருந்து இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவமொன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது.
சீனாவை சேர்ந்த இருவர் பயணித்த காருக்கு மேலாக கொள்கலன் தாங்கிய வாகனம் பயணித்ததில் கார் முற்றாக சேதமடைந்தது.
இவ்விபத்தை நேரில் பார்த்தவர்களும், சம்பவ இடத்திற்கு வருகைத் தந்த தீயணைப்பு படையினரும் காரில் இருந்தவா்கள் நிச்சியமாக உயிரிழந்திருப்பார்கள் என எண்ணினர்.
எனினும் பயணித்த இருவரும் உயிருடன் இருப்பதை கண்டு ஆச்சரியமடைந்தனர். அவர்கள் தம்மை காப்பாற்றுமாறு கேட்ட வண்ணம் இருந்தனர்.
துரிதமாக செயற்பட்ட மீட்பு பணியாளர்கள், பாரம் தூக்கியின் உதவியுடன் கொள்கலனை அகற்றி காரிலிருந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
கொள்கலன் ஏற்றிய வாகனம் காரின் மீது சரிந்தமையாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொள்கலன் ஏற்றிய வாகனத்தின் சாரதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.
கோர விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர் - படங்கள்
Reviewed by NEWMANNAR
on
July 25, 2014
Rating:

No comments:
Post a Comment