அண்மைய செய்திகள்

recent
-

விவாகம் புரிவதாக 17 யுவதிகளை ஏமாற்றியவர் கைது

விவாகம் புரிவதாக ஏமாற்றி 17 யுவதிகளிடம் நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் ஒருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு சிறுவர் மற்றும் பெண்கள் பணியக உத்தியோகத்தர்களால் இந்த நபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். 

 இது தொடர்பில் யுவதியொருவர் செய்த முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேகநபர் இணையத்தளம் ஊடாக விவாக யோசனைகளை முன்வைத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் யுவதிகளை ஏமாற்றி அவர்களிடம் பணமோசடியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 

 சந்தேகநபர் சில யுவதிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறித்தும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே மோசடியில் ஈடுபட்டதாக கைதுசெய்யப்பட்டுள்ளார். 

 மோசடிக்கு உள்ளானவர்கள் என சந்தேகிக்கப்படும் 17 யுவதிகளின் படங்களும் சந்தேகநபரின் கையடக்கத் தொலைபேசியில் பதிவாயிருந்ததாக பொலிஸார் மேலும் குறிப்பிடுகின்றனர்.
விவாகம் புரிவதாக 17 யுவதிகளை ஏமாற்றியவர் கைது Reviewed by NEWMANNAR on July 25, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.