அண்மைய செய்திகள்

recent
-

பல்கலைக்கழக அனுமதி கிடைத்தும் வறுமையால் படிப்பைத் தொடர முடியாத நிலையில் வட மாகாண மாணவர்கள்!

வடமாகாணத்தில் வாழ்கின்ற குடும்பங்களைச் சேர்ந்த அநேக மாணவர்கள் யுத்தத்தால் தமது உழைக்கும் உறவினர்களான தாய் தந்தையர் மற்றும் சகோதரங்களை இழந்தவர்களாக உள்ள நிலையில் இவர்கள் தங்கள் உயர் கல்வியை தொடர்வதற்கான வசதி வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறாத சூழ்நிலை காணப்படுகிறது என்று வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், பல்கலைகழக கல்வி மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். 

பாடசாலை கல்வியை முடித்த பெரும்பாலான மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காததன் காரணமாக தங்கள் உயர் கல்வியை தொடரமுடியாமல் இருக்கின்ற நிலையில் வடமாகாண மாணவர்களுக்கு அனுமதி கிடைத்தும் அங்கு செல்ல கூட முடியாத நிலை காணப்படுகிறது. வன்னியில் இடம்பெற்ற கொடூர யுத்தத்தால் மக்கள் தமது வாழ்வாதாரத்தையே இழந்து நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தார்கள். இவ்வாறு ஏற்பட்ட பெரும் பொருளாதார சீரழிவின் காரணமாக மக்கள் தங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கே மிகவும் கஷ்டப்பட்ட நிலையில் உள்ளனர். 

 தினம் தினம் ஏற்படுகின்ற வாழ்க்கைப் போராட்டத்தில் இருந்து விடுபட முடியாத மாணவர்கள் எவ்வாறு தாம் விரும்பும் பல்கலைக்கழக கல்வியை தொடரமுடியும்! சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் அக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் அன்றாட தேவைகளுக்கும் கல்விக்குமான அடிப்படை வசதிகளைச் செய்து வந்தது. 

 ஆனால் இன்றோ அந்நிறுவனங்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் இவர்கள் தங்கள் உதவிக்காக யாரிடம் கையேந்தி நிற்பர்? இவ்வாறு உயர் கல்வியை தொடரமுடியாமல் இருக்கின்ற வட மாகாண மாணவர்களுக்கு இன்றைய அரசு ஒரு வழியை ஏற்படுத்தி கொடுக்குமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. பெரும்பாலான மாணவர்கள் இது போன்ற வேறு சில வழிகளில் கல்வியை தொடர்வதற்கு இலகு கல்வி முறையை நடைமுறைப்படுத்திய இவ் அரசு பல்கலைக்கழக அனுமதி கிடைத்தும் கல்வியை தொடர முடியாமல் இருக்கின்ற எமது வட மாகாண மாணவர்களுக்கும் இது போன்ற ஒரு திட்டத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

 ஒரு வட்டியில்லா கடன் திட்டத்தை இவர்களுக்கு வழங்குவதன் மூலம் உயர் கல்வியை தொடரவும் தமது வாழ்வாதார நெருக்கடியிலிருந்தும் விடுபடவும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும். இதற்கான நிதி ஒதுக்கீட்டினை அரசு வங்கிகளினூடாக வழங்கி நிர்க்கதியாக நிர்க்கும் மாணவர்களுக்கு வழி காட்ட வேண்டும் என வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்கள் கேட்டுக்கொண்டார். அதற்காக வங்கிகளில் தங்களது கெடுபிடி கடன் யுக்திகளுக்கு எமது மாணவர்கள் ஈடுகொடுக்க முடியாத நிலை உள்ளது. எனவே அரசு இலகு முறை கடன் வழங்கும் திட்டத்தை மாணவர்களுக்காக உருவாக்குமா?
பல்கலைக்கழக அனுமதி கிடைத்தும் வறுமையால் படிப்பைத் தொடர முடியாத நிலையில் வட மாகாண மாணவர்கள்! Reviewed by NEWMANNAR on July 26, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.