சீனாவில் ரம்மாஸான் சூறாவளி; பலியானோரின் எண்ணிக்கை 16ஆக அதிகரிப்பு
சீனாவின் தென் பிராந்தியத்தை தாக்கிய ரம்மாஸான் சூறாவளியினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்வடைந்துள்ளது.
இன்று அதிகாலை சீனாவின் 15 மாகாணங்களையும் தாக்கிய சூறாவளியை அடுத்து அப்பகுதியிலுள்ள சுமார் ஒரு இலட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சூறாவளியினால் சுமார் 3 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகுவம் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால் தொலைத்தொடர்பாடல்களும் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
பிலிப்பின்சை கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கிய ரம்மாஸான் சூறாவளியினால் 89 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
சீனாவில் ரம்மாஸான் சூறாவளி; பலியானோரின் எண்ணிக்கை 16ஆக அதிகரிப்பு
Reviewed by NEWMANNAR
on
July 20, 2014
Rating:

No comments:
Post a Comment