வடமத்திய மாகாண வான்பரப்பில் தோன்றிய வெளிச்சம்! விண் கற்களின் வெடிப்பு!- ஆர்தர் சி கிளார்க் நிலையம்
இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் வான் பரப்பில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட வெளிச்சம் விண் கற்களின் வெடிப்பாக இருக்கலாம் என்று ஆர்தர் சி கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
விண் கற்கள் வெடிக்கும் போது இவ்வாறான வெளிச்சம் தோன்றக்கூடும் என்று அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
நிலையத்தின் பேச்சாளரின் தகவல்படி தற்போதைக்கு இது விண் கற்களின் வெடிப்பு என்று நம்பப்பட்டாலும் இன்னும் அது உறுதி செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டார்.
பூமியின் மேற்பரப்பில் மோதும் போது உயர் அமுக்கம் காரணமாக விண் கற்கள் வெடிக்கக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை கண்கண்ட சாட்சிகளின்படி குறித்த வெளிச்சம், தென் பகுதியில் இருந்து உருவாகி பின்னர் பூமியை நோக்கி வந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
இது சுமார் 10 அடி நீளமாக இருந்ததாகவும் அவர்கள் குறிப்பிடடுள்ளனர்.
எனினும் ஏதாவது பொருள் நிலத்தில் வீழ்ந்தமைக்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை.
வடமத்திய மாகாண வான்பரப்பில் தோன்றிய வெளிச்சம்! விண் கற்களின் வெடிப்பு!- ஆர்தர் சி கிளார்க் நிலையம்
Reviewed by NEWMANNAR
on
August 13, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 13, 2014
Rating:


No comments:
Post a Comment