தலைமன்னார் றோ.க.த.க பாடசாலை மாணவி குணசீலன் ஆன் பொபிஸா 190 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதல் இடம்-Photo
தரம் 5ம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் முதலாவது இடத்தினை தலைமன்னார் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவி குணசீலன் ஆன் பொபிசா 190 புள்ளிகளை பெற்று மாவட்டத்தின் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
குறித்த மாணவி வைத்தியராக வர வேண்டும் என்ற என்னத்தில் தனது கல்வியை தொடர்வதாக தெரிவித்தார்.முதலில் பாடசாலை அதிபருக்கும்,எனக்கு கற்பித்துத்தந்த ஆசிரியர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும்,தனது கற்றல் நடவடிக்கையின் போது எந்த நேரத்திலும் உறுதுணையாக இருந்த பெற்றோருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக குறித்த மாணவி தெரிவித்தார்.
இதே வேளை பேசாலை சென் மேரிஸ் பாடசாலை மாணவி ஒஸ்மன் வரின் டிவோனா பர்னாந்து 188 புள்ளிகளைப்பெற்று மாவட்டத்தின் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவன் யோகராஜா றொபேஸ் 187 புள்ளிகளைப்பெற்று மாவட்டத்தின் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தலைமன்னார் றோ.க.த.க பாடசாலை மாணவி குணசீலன் ஆன் பொபிஸா 190 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதல் இடம்-Photo
Reviewed by NEWMANNAR
on
September 29, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 29, 2014
Rating:


No comments:
Post a Comment