மன்னாரில் 1800 வீடுகளில் டெங்கு நுளம்பு பரவும் சூழல் கண்டுபிடிப்பு- மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.றோய் பீரிஸ்.
மன்னார் சுகாதார திணைக்களத்தினால் கடந்த 26 ஆம் 27 ஆம் திகதிகளில் மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பிரிவுகளில் உள்ள 5 ஆயிரம் வீடுகளில் டெங்கு பரிசோதனை செய்யப்பட்ட போது அவற்றில் 1800 வீடுகளில் டெங்கு நுளம்பு பரவும் சூழல் காணப்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.றோய் பீரிஸ் தெரிவித்தார்.
டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டத்தின் கீழ் மன்னார் நகரசபைக்குற்பட்ட பகுதிகளில் உள்ள கிராமங்கள் அனைத்திலும் உள்ள 5 ஆயிரம் வீடுகள் கடந்த வெள்ளி,சனி ஆகிய இரண்டு நாட்களில் பரிசோதனை செய்து டெங்கு இல்லாத மன்னார் நகரை உருவாக்கும் முதற்கட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட 5 ஆயிரம் வீடுகளில் குறித்த இரு தினங்களிலும் டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அனுசரனையுடன் குறித்த வேளைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த சோதனைகளின் போது சுமார் 1800 வீடுகளில் அடங்கு நுளம்பு பரவும் சூழல் உள்ள இடங்கள் கண்டு பிடிக்கப்பட்டது.அவற்றில் 75 வீதமான வீடுகள் உடனடியாக துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது.
மிகுதி வீடுகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் எதிர்வரும் 3 ஆம்,4 ஆம் திகதிகளில் வடமாகாண விசேட டெங்கு ஒழிப்பு நிகழ்வுகள் மேறகொள்ளப்படவுள்ள நிலையில் அடையாளம் காணப்பட்ட குறித்த வீடுகள் விசேட கவனம் செலுத்தப்பட்டு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
குறித்த பரிசோதனையின் போது ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட வீடுகள் மீண்டும் டெங்கு நுளம்பு பரவும் வகையில் அடையாளம் காணப்படும் பட்சத்தில் குறித்த வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.என மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.றோய் பீரிஸ் மேலும் தெரிவித்தார்.
மன்னாரில் 1800 வீடுகளில் டெங்கு நுளம்பு பரவும் சூழல் கண்டுபிடிப்பு- மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.றோய் பீரிஸ்.
Reviewed by NEWMANNAR
on
September 29, 2014
Rating:

No comments:
Post a Comment