அண்மைய செய்திகள்

recent
-

பிரபாகரன் கடல் வளத்தை பாதுகாத்தார்: வட மாகாண மீன்பிடி அமைச்சர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடல் வளத்தை பாதுகாத்ததாக வடக்கு மாகாண மீன்பிடித்துறை அமைச்சர் டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார். வல்வெட்டித்துறை கிழக்கு ஐக்கிய மீனவர்கள் சங்கம் நேற்று அமைச்சரிடம் மகஜர் ஒன்றை கையளித்த போதே அவர் இதனை கூறியுள்ளார். 

 கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபைக்கு எதிரில் இந்த மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னர், தமக்கு டோலர் படகுகளை பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி அமைச்சர் டெனிஸ்வரனிடம் கடிதம் ஒன்றை கையளித்தனர். ரோலர் படகுகள் காரணமாக வடக்கின் கடல் வளம் அழிந்து போகும் என்பதால், அதற்கு அனுமதி வழங்க முடியாது என அமைச்சர் இதன் போது கூறியுள்ளார். 

 இதன் காரணமாகவே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கூட அதற்கான அனுமதியை வழங்கவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். தொடர்புடைய செய்தி- வட மாகாணசபைக்கு முன்னால் மீனவர்கள் போராட்டம்- முதல்வரின் வாக்குறுதியுடன் போராட்டம் முடிவுக்கு வந்தது!
பிரபாகரன் கடல் வளத்தை பாதுகாத்தார்: வட மாகாண மீன்பிடி அமைச்சர் Reviewed by NEWMANNAR on October 10, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.