மன்னார் வெள்ளாங்குளம் துப்பாக்கிப் பிரயோக சம்பவம்; நான்கு சந்தேகநபர்கள் கைது
மன்னார் வெள்ளாங்குளம் கணேசபுரம் பகுதியில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான கிருஷ்ணசாமி புகுனேஷ்வரன் என்பவரே கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.
இதனை அடுத்து இலுப்பைகடவை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளினூடாக சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
மன்னார் வெள்ளாங்குளம் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் உயிரழந்தவர் புணர்வாழ்வழிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னார் வெள்ளாங்குளம் துப்பாக்கிப் பிரயோக சம்பவம்; நான்கு சந்தேகநபர்கள் கைது
Reviewed by NEWMANNAR
on
November 16, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 16, 2014
Rating:


No comments:
Post a Comment