அண்மைய செய்திகள்

recent
-

500 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்

ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் 500 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இடமாற்றம் வழங்கப்பட்டவர்களில் பொலிஸ் மாஅதிபரின் விசேட விசாரணைப் பிரிவின் 350 உத்தியோகத்தர்களும் உள்ளடங்குவதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன கெட்டியாராச்சி குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தல் அண்மித்துள்ள நிலையில் கடந்த 18 ஆம் திகதி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் தேர்தல் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த மூன்று மாதங்களுக்குள் சுமார் 150 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் தேர்தல்கள் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படாத வகையில் பொலிஸ் மாஅதிபர், மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
500 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் Reviewed by NEWMANNAR on November 24, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.