மாஞ்சோலை வைத்தியசாலையில் தீ
முல்லைத்தீவு, மாஞ்சோலை மாவட்ட வைத்தியாசலையில்; திங்கட்கிழமை (24) காலை திடீரென்று ஏற்பட்ட மின்னொழுக்குக் காரணமாக தீ பரவியமையால், வைத்தியசாலையின் கதிரியக்கப்பிரிவு (எஸ்ரே பிரிவு) சேதமடைந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வைத்தியசாலையில் புகை மண்டலம் காணப்பட்டதாகவும் இந்த நிலையில், இராணுவத்தினரின் உதவியுடன் வைத்தியசாலை ஊழியர்கள் தீயை அணைத்தனர்.
இதனால், கதிரியக்கப் பிரிவில் வைக்கப்பட்டிருந்த இயந்திரமொன்றும் தீயில் கருகியுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாஞ்சோலை வைத்தியசாலையில் தீ
Reviewed by NEWMANNAR
on
November 24, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 24, 2014
Rating:
.jpg)

No comments:
Post a Comment