பொதுவேட்பாளருக்கு ஆதரவு என்று பிரித்தானிய கொன்சவேட்டிவ் கட்சி அறிவிப்பு
பொதுவேட்பாளர் மைத்திரிபாலவின் தேர்தல் வெற்றிக்கு உதவுவதாக பிரித்தானிய கொன்சவேட்டிவ் கட்சி அறிவித்துள்ளது.
இலங்கைக்கு வருகை தந்துள்ள கொன்சவேட்டிவ கட்சியின் மூன்று உறுப்பினர்கள் அண்மையில் பொதுவேட்பாளர் மைத்திரிபாலவை சந்தித்தனர்.
இதன்போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இரகசியமாக மேற்கொள்ளப்பட்ட தரவு திரட்டலின் அடிப்படையிலேயே இந்த சந்திப்பும் உறுதிமொழியும் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சிறப்பான ஆட்சியை கொண்;ட அரசாங்கம் ஒன்றையே பிரித்தானிய அரசாங்கம் விரும்புவதாக இதன் போது ஆளும் கொன்சவேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த மூவரும் ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, ஜே வி பி முன்னாள் தலைவர் சோமவன்ச மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக்குழு தலைவர் கரு ஜெயசூரிய ஆகியோரையும் சந்தித்தனர்.
இலங்கை தொடர்பான அறிக்கையை தொகுத்து பிரித்தானிய அரசாங்கத்துக்கு வழங்கும் முகமாகவே அவர்களின் விஜயம் திட்டமிடப்பட்டிருந்தது.
பொதுவேட்பாளருக்கு ஆதரவு என்று பிரித்தானிய கொன்சவேட்டிவ் கட்சி அறிவிப்பு
Reviewed by NEWMANNAR
on
December 14, 2014
Rating:

No comments:
Post a Comment