ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்புமனு ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பம்
ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்புமனு ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
காலை 09 மணிக்கு ஆரம்பமான வேட்புமனு ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை, முற்பகல் 11 மணிவரை இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது.
முற்பகல் 11.30 மணி வரையில் ஆட்சேபனைகளை கையளிப்பதற்கு காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்ட காலஅவகாசம், நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்திருந்தது.
இதற்கமைய, அங்கீகரிக்கப்பட்ட 17 அரசியற்கட்சிகளும், 02 சுயேட்சை உறுப்பினர்களும் ஜனாதிபதித் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
வேட்புமனு தாக்கல்செய்யும் காலப்பகுதியில் பொரளை வீதி மற்றும் பாராளுமன்ற வீதியில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்புமனு ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பம்
Reviewed by NEWMANNAR
on
December 08, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment