வட மாகாண சபைக்கு நிதி வழங்குவதாக கூறிக்கொண்டு அரசாங்கம் தானே பணத்தை செலவு செய்கின்றது; விக்கினேஸ்வரன்
வட மாகாண சபைக்கு நிதி வழங்குவதாக கூறிக்கொண்டு அரசாங்கம் தானே பணத்தை செலவு செய்கின்றது.ஆனால் இதனை புரிந்துகொள்ள முடியாது மக்கள் எம்மிடம் கேட்கின்றார்கள் நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்று.நாம் இதனையிட்டு பெரும் கவலை அடைந்துள்ளோம் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் உதவியுடன் இந்தியாவில் இருந்து வருகை தந்த றோட்டறிக்கழகங்களினால் வாழ்வக மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வாழ்வகத் தலைவர் ஆ.ரவீந்திரன் தலைமையில் நடை பெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் இன்று வழங்கப்படுகின்ற உதவிகள் மனிதாபிமானத்தின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.இறைவன் நல்லவைகளுக்குள்ளும் பிரச்சனைகள் முரண்பாடுகளையும் சேர்த்தே படைத்துள்ளான்.
இதனை நிவர்த்தி செய்ய வேண்டுமாக இருந்தால் இருப்பவன் இல்லாதவனுடன் பகிர்ந்து கொள்வதன் மூலமே நல்லதொரு தீர்வையெட்ட முடியும்.பாண்டவர்களும் கௌரவர்களும் இருந்த சபையில் கூறப்பட்டது கையை மடக்காது உணவை எடுதது உண்ணுங்கள் என்று.
யாரும் அதனை செய்யமுடியாது திண்டாடிய வேளையில் அபிமன்யு கையை நீட்டி உணவை எடுத்த எதிரே இருந்த கௌரவர் பக்கத்தில் உள்ள ஒருவருக்கு ஊட்டிவிட அதனையே மற்றவரும் செய்ய இருவரும் சந்தோசமாக உண்ணக் கூடியதாக காணப்பட்டது. இதனைத்தான் இன்று றோட்டறிக் கழகமும் செய்துள்ளது.
இத்தகைய நடவடிக்கைக்கு பெரும் துணையாக இந்திய துணைத்தூதரகம் செயற்பட்டுள்ளது பாராட்டத்தக்கதாகும்.
இந்திய அரசியல் திட்டத்தின்படி வட மாகாண சபை நிறுவப்பட்ட போதிலும் அது போதிய அதிகாரங்களைக் கொண்டதாக காணப்படவில்லை.எமது பெயரில் பெறப்படும் நிதிகள் கூட எமக்கு உரிய முறையில் கிடைப்பதில்லை.
இன்று வட மாகாணத்திற்கான புகையிரதப் பாதை போடப்படுகின்றது.இந்திய நிதி உதிவியுடன் ஆனால் இதனைப் பற்றி எதுவும் எமக்கு தெரியமாட்டாது.இதேபோன்று நிலமையே நிதி விடயத்தில் காணப்படுகின்றது.
எமது மக்கள் எம்மிடம் கேட்கும் சந்தர்ப்பத்தில் நாம் கூறுவது தொப்புள் கொடி உறவுகளின் மூலம் பெறப்படும் நிதியில் இருந்து வேண்டியவற்றை செய்ய முயல்வதாக .அந்த வகையிலான் ஒரு நிகழ்வே தற்போது இடம் பெற்றுக் கொண்டு இருக்கும் நிகழ்வும்ஆகும்.
எமக்கு வெளிநாடுகளில் வாழும் உறவுகளிடம் இருந்து கிடைக்கும்; நிதிகள் சம்பந்தமாக அரசுக்கு தெரிந்தால் அரசு அதனை புலிகளினது பயங்கரவாதிகளினது எனக் கூறி தடை செய்ய முனைந்து நிற்கும் எனவும் குறிப்பிட்டார்.
வட மாகாண சபைக்கு நிதி வழங்குவதாக கூறிக்கொண்டு அரசாங்கம் தானே பணத்தை செலவு செய்கின்றது; விக்கினேஸ்வரன்
Reviewed by NEWMANNAR
on
December 08, 2014
Rating:

No comments:
Post a Comment