அண்மைய செய்திகள்

recent
-

பாப்பரசர் 13ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்வது பொருத்தமற்றது!– அனுராதபுரம் பேராயர்

பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் எதிர்வரும் ஜனவரி 13ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்வது பொருத்தமற்றது என அனுராதபுரம் பேராயர் நோபட் அந்ராதி ஆண்டகை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 13ம் திகதி பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்வது பொருத்தமற்றது என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளியாகி பதற்ற நிலைமை தணிவதற்கு முன்னதாக பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்வது எந்தளவிற்கு பொருத்தமானது என்பதனை பொறுப்பு வாய்ந்தவர்கள் தீர்மானிக்க வேண்டும்.

ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிந்த உடனேயே பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்வது பொருத்தமற்றது.

பேராயர் சபையில் அங்கம் வகிக்கும் பல பேராயர்களின் நிலைப்பாடும் இதுவாகவே உள்ளது.

சில அரசியல்வாதிகள் பாப்பாண்டவரின் படத்தை ஜனாதிபதி தேர்தல் பிரச்சார பணிகளுக்கு பயன்படுத்திக் கொண்டுள்ளமை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டுமென நோபட் அந்ராதி ஆண்டகை தெரிவித்துள்ளார்.

சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாப்பரசர் 13ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்வது பொருத்தமற்றது!– அனுராதபுரம் பேராயர் Reviewed by NEWMANNAR on December 15, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.