உயர்தரப் பரீட்சை பெறுபேறு இரு வாரங்களுக்குள் வெளியாகும் – ப.தி
உயர்தரப் பரீட்சை பெறுபேறு இரு வாரங்களுக்குள் வெளியாகும் – ப.தி

பெறுபேறுகளை பட்டியலிடும் நடவடிக்கை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
இம்முறை உயர் தரப் பரீட்சையில் இரண்டு இலட்சத்து 34 ஆயிரத்து 197 பாடசாலை பரீட்சார்த்திகளும், 62 ஆயிரத்து 134 தனியார் பரீட்சார்த்திகளும் தோற்றியிருந்தனர்.
இதேவேளை, நடைபெற்று வருகின்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் முறைகேடு இடம்பெற்றதாக இதுவரை எவ்வித தகவலும் பதிவாகவில்லை எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.
உயர்தரப் பரீட்சை பெறுபேறு இரு வாரங்களுக்குள் வெளியாகும் – ப.தி
Reviewed by NEWMANNAR
on
December 15, 2014
Rating:

No comments:
Post a Comment