சாதாரண தரப் பரீட்சை ஆரம்பம்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகியுள்ளது.
நாடளாவிய ரீதியில் 4,279 நிலையங்களில் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை இந்தப் பரீட்சை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இம்முறை சாதாரண தரப் பரீட்சையில் 3,70,739 பாடசாலை பரீட்சார்த்திகளும், 2,06,481 தனியார் பரீட்சார்த்திகளும் தோற்றவுள்ளனர்
இதேவேளை, பரீட்சை நிலையங்கள் மற்றும் இணைப்பு நிலையங்களுக்குள் அனுமதியற்ற எவரும் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவிக்கின்றார்.
பரீட்சை நிலையங்களை அண்மித்த பகுதிகளில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தப்படுவதையும், ஊர்வலங்கள், கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதையும் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் பொலிஸ் மாஅதிபரிடம் கேட்டுக்கொண்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சாதாரண தரப் பரீட்சை ஆரம்பம்
Reviewed by NEWMANNAR
on
December 09, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment