மன்னார் எழுத்தூர் பகுதியில் உள்ள வீடொன்றில் நகை மற்றும் மோட்டார் சைக்கில் திருட்டு.
மன்னார் எழுத்தூர் பகுதியில் உள்ள வைத்தியர் ஒருவரது வீடொனிறில் நேற்று திங்கட்கிழமை (08-12-2014) காலை திருட்டுச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னார் எழுத்தூர் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று திங்கட்கிழமை காலை 6 மணியளவில் முகமுடி அணிந்த ஒருவரும்,முகமுடி அணியாத மூவரும் கூரிய ஆயுதங்களுடன் வீட்டினுள் சென்றுள்ளனர்.
வீட்டில் வைத்தியர் இல்லாத நிலையில் அங்கு இருந்த மூன்று பெண்களையும் கூரிய ஆயுத முனையில் அச்சுறுத்திய திருடர்கள் குறித்த மூன்று பெண்களையும் கட்டி வைத்து விட்டு சுமார் 6 பவுண் நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.அத்தோடு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புத்தம் புதிய மோட்டார் சைக்கிளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
திருடர்கள் வீட்டில் இருந்து வெளியில் செல்லும் போது அதில் ஒரு திருடன் வீட்டில் வைக்கப்பட்டிருந்த மாதா சொரூம் ஒன்றின் முன் சென்று சொரூபத்தை தொட்டு கும்பிட்டு விட்டுச் சென்றுள்ளார்.
திருடர்கள் சென்று நீண்ட நேரத்தின் பின் குறித்த பெண்கள் கயிற்றை அவிழ்த்து வெளியில் வந்து அயலவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
பின் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் மன்னார் பொலிஸார் வருகை தந்ததோடு மோப்ப நாய் கொண்டு வந்து தேடுதல்களை மேற்கொண்டுள்ளனர்.
சில தடைய பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.பின் வவுனியாவில் இருந்து விசேட தடவியல் பிரிவு பொலிஸார் நேற்று மாலை குறித்த வீட்டிற்குச் சென்று தடயங்களை பெற்றுக்கொண்டனர்.மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் எழுத்தூர் பகுதியில் உள்ள வீடொன்றில் நகை மற்றும் மோட்டார் சைக்கில் திருட்டு.
Reviewed by NEWMANNAR
on
December 09, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment