அமைச்சர் றிஸாட் பதியுதீன் அரச உடைமைகளை தேர்தலுக்குப் பயன்படுத்துகின்றார் என்ற முறைப்பாடு அதிருப்தியை ஏற்படுத்துகின்றது-றிப்கான் பதியுதீன்.
அமைச்சர் றிசாத் பதியுதீன் அரச உடைமைகளை தேர்தலுக்கு பயன்படுத்துகின்றார் NFGG முறைப்பாடு என்னும் தலைப்பில் இணையத்தளங்களில் வெளியான செய்தி தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அதிருப்பதியிருப்தியினை வெளியிட்டுள்ளதுடன்,இது குறித்து விளக்கமொன்றினையும் அளித்துள்ளார்.
2013-2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கான நஷ்டயீடு கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டதற்கமைய அரசாங்கம் நிதியினை கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒதுக்கீடு செய்திருந்தது.
விவசாயிகளுக்கான கொடுப்பனவு பட்டியல் தயாரிக்கப்பட்டதன் பின்னர் இவைகள் வழங்கப்பட நடவடிக்கையெடுக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் என்ற வகையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்த கொடுப்பனவுக்கான காசோலையினை அண்மையில் முசலியில் வைத்து வழங்கி வைத்தார்.
இந்த கொடுப்னவு தொடர்பில் NFGG என்ற அமைப்பு வெளியிட்டுள்ள பிழையான தகவலை தாம் வண்மையாக கண்டிக்கின்றேன்.
இது அரசியல் நோக்கம் கொண்டு செய்யப்பட்டது ஒன்றல்ல.
அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் வடக்கில் மட்டுமல்ல வடக்கிற்கு வெளியேயும்,வாழும் அனைத்து மக்களுக்கும் பாரிய பணிகளை செய்கின்றார்.
குறிப்பாக வடக்கில் வாழும் அனைத்து சமூகங்களின் மேம்பாடுகளுக்காக இனவாத சிந்தனையின்றி செயற்படும் ஒரு தலைவர்,இந்த தலைமயினை இல்லாமல் ஆக்கும் என்ன பணிகளை செய்ய முடியுமோ அதனை இந்த அமைப்புக்கள் தொடராக செய்து வருகின்றன.அதில் இதுவும் ஒன்றாக நான் கருதுகின்றேன்.
வடக்கில் வாழும் விவசாயிகளுக்கு தொடராக தேவையானவற்றை அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் செய்து வருகின்றார்கள் என்பதை இந்த விவசாயிகள் அங்கீ கரித்துள்ளதன் பயனாகவே கடந்த பொதுத் தோர்தலின் போது மக்களிடம் கேட்டுக்கொண்டதற்கமைய மக்கள் வாக்களித்து இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொண்டதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
இவ்வாறான நிலையில் இந்த கட்சி ஜனநாயகக் கட்சி என்பதால் கட்சிக்குள் தனிப்பட்ட இலாப நோக்கங்கங்களை அடைந்து கொள்ள முற்படும் நபர்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்ற சில குறுகிய காரணங்களுக்காக வெளியே செல்பவர்கள்,இன்று சில பிழையான தகவல்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல கிழக்கினை மையமாக கொண்ட அமைப்பொன்று,தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து அமைச்சர் றிசாத்தின் பணிகளை கொச்சைப்படுத்தி அதன் மூலம் மக்களுக்கு செல்லும் நன்மைகளை இல்லாமல் ஆக்கப்பார்க்கின்றார்கள் என கூறிய வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் மக்கள் சரியான முடிவை இந்த எதிர் சக்திகளுக்கு தகுந்த பதிலை வழங்குவார்கள் என்றும் கூறினார்.
தொடர்புடைய செய்தி

Reviewed by NEWMANNAR
on
December 15, 2014
Rating:

No comments:
Post a Comment