தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் சிறைக்கைதிகள்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக சிறைக்கைதிகளை ஈடுபடுத்தியுள்ளதாக கபே அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
மாத்தறை மாவட்டம் கம்புறுப்பிட்டியவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசார நடிவடிக்கைகளில் மேடை அமைப்பு மற்றும் அலங்காரங்களுக்காக 44 சிறைக்கைதிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு பிரத்தியேக உடைகளும் வழங்கப்பட்டிருப்பதாக கபே அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
சிறைச்சாலை திணைக்களத்துக்கு சொந்தமான வாகனங்களும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் சிறைக்கைதிகள்
Reviewed by NEWMANNAR
on
December 15, 2014
Rating:
_8.jpg)
No comments:
Post a Comment