அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகர சபையின் பட்ஜெட் வெற்றி.

மன்னார் நகர சபையின் 2015 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டடம் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக மன்னார் நகர சபை உறுப்பினர் இ.குமரேஸ் தெரிவித்துள்ளார்.

-மன்னார் நகர சபையின் 2015 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டமானது கடந்த 3 ஆம் திகதி நடை பெற்ற விசேட சபைக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஏகமனதான தீர்மானத்திற்கமைய மக்கள் பார்வைக்கு உற்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மக்கள் பார்வையின் போது பெறப்பட்ட கருத்துக்கள் மற்றும் அபிப்பிராயங்களுடன் வரவு செலவு திட்டத்தின் இருதி வாசிப்பு கடந்த திங்கட்கிழமை 15 ஆம் திகதி இடம் பெற்ற டிசம்பர் மாதத்திற்கான சபைக்கூட்டத்தில் மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அவர்களினால் முன்வைக்கப்பட்டது.

சபையின் தலைவர் உற்பட உப தலைவர்,செயலாளர் மற்றும் சபையின் சகல உறுப்பினர்களும் கலந்து கொண்டு வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட சில அபிவிருத்தி வேளைத்திட்டங்கள் மற்றும் இதர விடையங்கள் விவசாதிக்கப்பட்டு சில திருத்தங்களுடன் ஏகமனதாக அங்கிகரிக்கப்பட்டுள்ளது.

-மேலும் வரவு செலவுத்திட்டத்தில் 2015 ஆம் ஆண்டுக்கான மொத்த வருமானமாக 92,195,630.00 ரூபாவும்,மொத்தச் செலவீனமாக 92,193,780.00 ரூபாவும் மிகையாக 1,850.00 ரூபாய் எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் சபையின் மொத்த மீண்டு வரும் செலவினத்தில் நிர்வாக செலவினத்திற்காக 20,546,400.00 ரூபாவும்,சுகாதார சேவைகளுக்காக 19,609,000.00 ரூபாவும்,பௌதீக திட்டமிடலுக்காக 16,645,800.00 ரூபாவும்,தண்ணீர் சேவைகளுக்காக 4,550,500.00 ரூபாவும்,பொதுப் பயண்பாட்டு சேவைகளுக்காக 1,526,600.00 ரூபாவும்,நலன்புரிச் சேவைகளுக்hக 4,665,480.00 ரூபாய் மற்றும் மூலதன செலவினங்களுக்காக 28,650,000.00  ரூபாய் எனவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நகர சபை உறுப்பினர் இ.குமரேஸ் மேலும் தெரிவித்தார்.
மன்னார் நகர சபையின் பட்ஜெட் வெற்றி. Reviewed by NEWMANNAR on December 17, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.