பெரிய கடையில் அமைந்துள்ள மது விற்பனை நிலையத்தை அகற்ற முடியாமைக்கான காரணம் என்ன? ம ந உறுப்பினர் என்.நகுசீன்
மன்னார் பெரிய கடை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மது விற்பனை நிலையத்தை அகற்ற இது வரை ஏன் மன்னார் நகர சபை நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை என மன்னார் நகர சபை உறுப்பினர் என்.நகுசீன் கேள்வி எழுப்பினர்.
மன்னார் நகர சபையின் இவ்வருடத்திற்கான இருதி கூட்டம் நேற்று திங்கட்கிழமை(15) மன்னார் நகர சபையில் இடம் பெற்றது.இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
இவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
மன்னார் நகர சபைக்குற்பட்ட பெரிய கடை பகுதியில் மன்னார் நகர சபையின் அனுமதி இன்றி மது விற்பனை நிலையம் ஒன்றை திறந்துள்ளனர்.
குறித்த மது விற்பனை நிலையம் திறக்கப்பட்டு ஒரு வருடத்தை தாண்டுகின்றது.ஆனால் மன்னார் நகர சபையிடம் விற்பனை உரிமம் பெறுவதற்கான அனுமதி பெற்றுக்கொள்ளப்படாத நிலையில் குறித்த மது விற்பனை நிலையம் இயங்கி வருகின்றது.
குறித்த மது விற்பனை நிலையத்தினால் அப்பகுதி மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக தொடர்ச்சியாக எங்களிடம் முறையிட்டு வருகின்றனர்.
எனவே மன்னார் நகர சபை இவ்விடையத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். என நகர சபை உறுப்பினர் என்.நகுசீன் தெரிவித்தார்.
-அதற்கு பதிலலித்த மன்னார் நகர சபை தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம்,,,
-குறித்த மதுவிற்பனை நிலையத்திற்கு மன்னார் நகர சபை எவ்வித அனுமதியையும் வழங்கவில்லை.ஆனால் அவர்கள் ஏனைய சகல அனுமதியையும் பெற்றுள்ளனர்.அப்பகுதி மக்களின் ஒற்றுமை இன்மையினால் நடவடிக்கை எதனையும் மேற்கொள்ள முடியவில்லை.அரசியல் செல்வாக்குடன்,பொலிஸாரின் ஆதரவுடனும் குறித்த மது விற்பனை நிலையம் இயங்கி வருகின்றது.இதனால் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.என தெரிவித்தார்.
(மன்னார் நிருபர்)
(16-12-2014)

Reviewed by NEWMANNAR
on
December 16, 2014
Rating:
No comments:
Post a Comment