மன்னார் சாந்திபுரம் 'குரோ ஸ்டார்' விளையாட்டுக்கழகத்திற்கு செல்வம் எம்.பி ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.-Photos
மன்னார் சாந்திபுரம் 'குரோ ஸ்டார்' விளையாட்டுக்கழகத்திற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனது பன்முகப்படுத்தப்பட்டு நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள் நேற்று(8) ஞாயிற்றுக்கிழமை மாலை விளையாட்டுக்கழகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை(8) மாலை மன்னார் சாந்திபுரம் கிராம அபிவிருத்திச்சங்க மண்டபத்தில் கிராம அபிவிருத்திச்சங்கத்தின் தலைவர் ரி.அன்ரன் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களினால் மன்னார் சாந்திபுரம் குரோ ஸ்டார் விளையாட்டுக்கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள் கழக உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் சாந்திபுரம் கிராம அபிவிருத்திச்சங்கத்தின் செயலாளர் எஸ்.நேசன்,மற்றும் அக்கிராம மக்கள்,விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் சாந்திபுரம் 'குரோ ஸ்டார்' விளையாட்டுக்கழகத்திற்கு செல்வம் எம்.பி ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
March 09, 2015
Rating:
No comments:
Post a Comment