திருக்கேதீஸ்வரத்தில் இருந்து தலைமன்னார் புகையிரத தரிப்பிடம் வரையிலான புகையிரத வேலைத்திட்டங்கள் நிறைவடையும் நிலையில்.-Photos
எதிர்வரும் 13 ஆம் திகதி இலங்கைக்கு வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மறுநாள் 14 ஆம் திகதி மன்னாருக்கு வருகை தரவுள்ள நிலையில் சுமார் 26 வருடங்களுக்கு பின்பு மதவாச்சியில் இருந்து தலைமன்னாருக்கான புகையிரத சேவையை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
தற்போது மதவாச்சியில் இருந்து மடு வரை புகையிரத சேவைகள் இடம் பெற்று வரும் நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி மதவாச்சியில் இருந்து தலைமன்னாருக்கான புகையிரத சேவையினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
1990 ஆம் ஆண்டிற்கு பின்னார் நாட்டில் இடம் பெற்ற யுத்தத்தின் காரணமாக தெற்கில் இருந்து வடக்கிற்கான புகையிரத சேவைகள் இடை நிறுத்தப்பட்டது.யுத்தத்தின் காரணமாக புகையிரத பாதைகள்,புகையிரத நிலையங்கள் சேதப்படுத்தப்பட்டது.
சுமார் 26 வருட காலமாக மதவாச்சியில் இருந்து மன்னாருக்கான புகையிரத சேவைகள் தடைப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மீண்டும் 26 வருடங்களின் பின்னார் மதவாச்சியில் இருந்து மன்னார் ஊடாக தலைமன்னாருக்கான புகையிரத சேவைகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் மதவாச்சியில் இருந்து மன்னார் திருக்கேதீஸ்வரம் புகையிரத நிலையம் வரையிலான புகையிரத பாதைகள் மற்றும் தரிப்பிடங்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது.
திருக்கேதீஸ்வரம் புகையிரத நிலையத்தில் இருந்து தலைமன்னார் புகையிரத தரிப்பிடம் வரையிலான வேலைத்திட்டங்கள் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
திருக்கேதீஸ்வரத்தில் இருந்து தலைமன்னார் புகையிரத தரிப்பிடம் வரையிலான புகையிரத வேலைத்திட்டங்கள் நிறைவடையும் நிலையில்.-Photos
Reviewed by NEWMANNAR
on
March 09, 2015
Rating:
No comments:
Post a Comment