வடமாகாண அமைச்சரின் முயற்சியால் குஞ்சுக்குளம் வீதிப் புனரமைப்பு பணிகள் துரிதம்.-Photos
மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கும் வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரனுக்கும் இடையில் கடந்த  சனிக்கிழமை(7)  இடம் பெற்ற விசேட சந்திப்பின் பலனாக குஞ்சுக்குளம் கிராமத்திற்குச் செல்லும் பிரதான பாதை புனரமைக்கப்பட்டு வருவதாக அக்கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
குஞ்சுக்குளம்,மாதா கிராமம்,பெரிய முறிப்பு ஆகிய 3 கிராமங்களுக்கும் செல்லும் பிரதான வீதி கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது.
இதனால் கடந்த 3 மாங்களுக்கு மேலாக போக்கு வரத்து வசதிகள் இன்றி குறித்த 3 கிராமங்களையும் சேர்ந்த மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரனுக்கும் அக்கிராம மக்களுக்கும் இடையில் கடந்த சனிக்கிழமை விசேட சந்திப்பு இடம் பெற்றது.
இதன் போது குறித்த வீதியை புனரமைப்பு செய்து போக்கு வரத்து வசதியை ஏற்படுத்தித்தருமாறு அக்கிராம மக்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் குறித்த வீதியை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை உடன் மேற்கொண்ட நிலையில் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு அவ்வீதியை புனரமைப்பு செய்ய பணிப்புரை விடுத்தார்.
-இந்த நிலையில் குறித்த வீதி புனரமைப்பு செய்யப்பட்டு வரும் நிலையில் குறித்த வீதியை நேரில் சென்று பார்வையிட்டார். குறித்த வீதி புனரமைப்பு பனிகள் முடிவடைந்த நிலையில் மக்களுக்கான பேரூந்து சேவையை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
வடமாகாண அமைச்சரின் முயற்சியால் குஞ்சுக்குளம் வீதிப் புனரமைப்பு பணிகள் துரிதம்.-Photos
 Reviewed by NEWMANNAR
        on 
        
March 11, 2015
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
March 11, 2015
 
        Rating: 
       Reviewed by NEWMANNAR
        on 
        
March 11, 2015
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
March 11, 2015
 
        Rating: 






 
 
.jpg) 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment