அண்மைய செய்திகள்

recent
-

மடு பூ மலந்தான் கிராமத்தில் மீள் குடியேறியுள்ள தம்பனைக்குளம் கிராம மக்களின் அடிப்படை தேவை குறித்து ஆராய்வு.-Photos



மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தம்பனைக்குளம் கிராமத்தில் இருந்து இடம் பெயர்ந்து தற்போது மடு பூ மலர்ந்தான் கிராமத்தில் மீள் குடியேற்றப்பட்டு வரும் மக்களை வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் நேற்று(7) சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.

வருடா வருடம் இயற்க்கை அனர்த்தத்தால் ஏற்ப்படும் வெள்ளத்தின் காரணமாக மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தம்பனைக்குளம் கிராமம் வெள்ளத்தில் மூழ்குவது வழமை.

இந்த நிலையில் குறித்த தம்பனைக்குளம் கிராம மக்களை பூ மலந்தான் கிராமத்தில் குடியேற்ற மடு பிரதேசச் செயலாளர் பல மாதங்களாக முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில் தம்பனைக்களம் கிராமத்தில் வசித்து வரும் 364 குடும்பங்களில் தமது சுய விருப்பத்தின் பேரில் பூ மலந்தான் கிராமத்தில் மீள் குடியேற விரும்பிய 273 குடும்பங்களுக்கு மடு பூ மலந்தான் கிராமத்தில் காணிகள் வழங்கப்பட்ட நிலையில் அந்த மக்கள் குறித்த காணிகளை துப்பரவு செய்து தற்காலிக கொட்டில்களை அமைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் மீள் குடியேறிய பூ மலந்தான் கிராமத்திற்கு நேற்று சனிக்கிழமை(7) திடீர் விஜயம் மேற்கொண்ட வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அக்கிராம மக்களை சந்தித்து தேவையான உதவிகள் குறித்து கேட்டறிந்தார்.

குறிப்பாக குறித்த கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதி புனரமைப்பு செய்தல்,போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துதல்,வீட்டுத்திட்டம் பெற்றுக்கொள்ளுதல் ஆகியவை தொடர்பாக அந்த மக்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.


மீள் குடியேறிய மக்களின் அடிப்படை வசதிகளை பெற்றுத்தர மீள் குடியேற்ற அமைச்சருடன் தொடர்பு கொண்டு உரிய உதவிகளை மேற்கொள்ளுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதன் போது மடு பிரதேச செயலாளர் சத்திய சோதியும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.











மடு பூ மலந்தான் கிராமத்தில் மீள் குடியேறியுள்ள தம்பனைக்குளம் கிராம மக்களின் அடிப்படை தேவை குறித்து ஆராய்வு.-Photos Reviewed by NEWMANNAR on March 08, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.