அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் அரச பேரூந்து சாலையின் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் ஹீனைஸ் பாரூக் எம்.பிக்கும் இடையில் விசேட சந்திப்பு.-Photos




மன்னார் அரச பேரூந்து சாலையின்(டிப்போ) தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக்கிற்கும் இடையில் இன்று திங்கட்கிழமை(9) காலை 9.30 மணியளவில் மன்னார் டிப்போவில் விசேட சந்திப்பு இடம் பெற்றது.

இதன் போது மன்னார் டிப்போவில் பல வருடங்களாக காணப்படுகின்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து மன்னார் டிப்போவின் தொழிற்சங்க பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

குறிப்பாக மன்னார் டிப்போவில் நீர் பற்றாக்குறை,மலவச கூடம் இன்மை,தங்குமிட வசதிகள் இல்லாமை, மற்றும் நிறந்தர நியமனம் வழங்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர்.

தற்போது இயங்கி வரும் மன்னார் டிப்போவின் தொழிற்சங்க நிர்வாகத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் தெரியப்படுத்தினர்.

இந்த நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதி போக்குவரத்து அமைச்சர் மன்னார் வருகை தரவுள்ள நிலையில் குறித்த பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் உறுதியளித்தார்.

குறித்த சந்திப்பில் ஐக்கிய தேசியக்கட்சியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் ஏ.எஸ்.எம்.பஸ்மி மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







மன்னார் அரச பேரூந்து சாலையின் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் ஹீனைஸ் பாரூக் எம்.பிக்கும் இடையில் விசேட சந்திப்பு.-Photos Reviewed by NEWMANNAR on March 09, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.