இடம் பெயர்ந்து வாழும் மாந்தை திருக்கேதீஸ்வரம் 'கோயில் பிட்டி' கிராம மக்களை தமது சொந்த கிராமத்தில் மீள் குடியேற்ற கோரிக்கை..-Photos
இடம் பெயர்ந்த நிலையில் உறவினர்களின் வீடுகளிலும்,வாடகை வீடுகளிலும் வாழ்ந்து வரும் தங்களை தங்களின் சொந்த கிராமமான மாந்தை திருக்கேதீஸ்வரம் 'கோயில் பிட்டி' கிராமத்தில் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அக்கிராம மக்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று திங்கட்கிழமை(9) காலை மாந்தை திருக்கேதீஸ்வரம் 'கோயில் பிட்டி' கிராம பகுதிக்கு வருகை தந்த தொல் பொருள் திணைக்கள அதிகாரிகளிடமே குறித்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்விடையம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,,,,,
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மாந்தை திருக்கேதீஸ்வரம் 'கோயில் பிட்டி' கிராம மக்கள் நாட்டில் இடம் பெற்ற யுத்தத்தின் காரணமாக கடந்த 1990 ஆம் ஆண்டு இடம் பெயர்ந்து சென்றனர்.சுமார் 100 குடும்பங்கள் வரை இவ்வாறு இடம் பெயர்ந்து சென்றுள்ளனர்.
இக்கிராம மக்கள் இந்தியா மற்றும் நாட்டின் பல பாகங்களிலும் அகதிகளாக வாழ்ந்து வந்த நிலையில் மீண்டும் கடந்த 2002 ஆம் ஆண்டு திருக்கேதீஸ்வரத்திற்கு மீள் குடியேற வந்துள்ளனர்.
எனினும் மாந்தை திருக்கேதீஸ்வரம் 'கோயில் பிட்டி' கிராமம் உற்பட அப்பகுதி இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலையமாக பிரகடனப்படுத்தப்பட்டமையினால் அக்கிராம மக்கள் தமது சொந்த இடங்களுக்கு மீளச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் உறவினர்களின் வீடுகளிலும்,வாடகை வீடுகளிலும் வாழவேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் 2010 ஆம் ஆண்டு மீண்டும் மாந்தை திருக்கேதீஸ்வரம் 'கோயில் பிட்டி' கிராம மக்களாகிய நாங்கள் எமது கிராமத்தில் உள்ள காணிகளை துப்பரவு செய்ய முயன்ற போது அப்பகுதியில் இருந்த இராணுவம் எமக்கு துப்பரவு செய்வதற்கான அனுமதியை வழங்கியிருந்தனர்.
-இந்த நிலையில் 2013 ஆண்டு எமது காணிகளைச் சுற்றி தொல் பொருள் திணைக்களத்திற்கு உரிய இடம் என கல் நாட்டப்பட்டுள்ளதோடு பெயர்ப்பலகையும் நாட்டப்பட்டுள்ளது.
-இதனால் இக்கிராம மக்களை குறித்த காணிகளுக்குள் செல்ல படையினர் மற்றும் தொல் பொருள் திணைக்கள அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை.காணிகளுக்குள் சென்றால் பள்ளம் தோண்டக்கூடாது,மரம் நடக்கூடாது,மதில் கட்டக்கூடாது என தெரிவித்துள்ளனர்.
-இதனால் நாங்கள் எங்கே செல்வது என்று தெரியாத நிலையில் எமது காணிகளுக்குள் நாங்கள் செல்ல முற்பட்டோம்.இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை(9) யாழ்ப்பாணத்தில் இருந்து தொல் பொருள் திணைக்கள அதிகாரிகள் மாந்தை திருக்கேதீஸ்வரம் 'கோயில் பிட்டி' கிராம பகுதிக்கு வருகை தந்தனர்.
இதன் போது திருக்கேதீஸ்வரம் மாந்தை பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் தலைமைக் காரியாலயத்திற்கு முன் ஒன்று திறண்டு எமது காணி பிரச்சினைகள் குறித்து வருகை தந்த அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினோம்.
எமது காணிகள் தொடர்பான ஆவணங்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் இரு வாரங்களுக்குள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக அந்த மக்களிடம் உறுதியளித்துள்ளனர்.
இடம் பெயர்ந்து வாழும் மாந்தை திருக்கேதீஸ்வரம் 'கோயில் பிட்டி' கிராம மக்களை தமது சொந்த கிராமத்தில் மீள் குடியேற்ற கோரிக்கை..-Photos
Reviewed by NEWMANNAR
on
March 09, 2015
Rating:
No comments:
Post a Comment