அண்மைய செய்திகள்

recent
-

கோட்டாபய ராஜபக்ஸ நாட்டிலிருந்து வௌியேறத் தடை


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ, முன்னாள் கடற்படைத் தளபதி எட்மிரல் சோமதிலக்க தசநாயக்க ஆகியோர் நாட்டிலிருந்து வெளியேறுவதை உடன் அமுலுக்கு வரும் வகையில் தடுப்பதற்கு காலி நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.


அவன்காட் தனியார் பாதுகாப்பு நிறுவனம் தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்ததை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவன்காட் நிறுவனத்தின் ஆலோசகராக முன்னாள் கடற்படைத் தளபதி செயற்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளது.

இதனைத் தவிர அவன்காட் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களான மேஜர் ஜெனரல் கே.பி.எகொடவெல மற்றும் கித்சிறி மஞ்சுல குமார ஆகியோரின் வெளிநாட்டுப் பயணங்களை தடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஸ நாட்டிலிருந்து வௌியேறத் தடை Reviewed by NEWMANNAR on March 09, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.