பொய்யான வழக்குகளில் இளைஞர்களை சிக்க வைக்க வேண்டாம்! பொலிஸாருக்கு நீதவான் எச்சரிக்கை
இளைஞர்களை பொய்யான முறையில் போதைப்பொருள் வழக்குகளில் சிக்க வைக்க வேண்டாம் என பொலிஸாருக்கு நீதவான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அநியாயமாக இளைஞர்களை கைது செய்து, உங்களிடமுள்ள போதைப்பொருட்களை அவர்களின் கைகளில் போட வேண்டாம் என கோட்டே நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதவான் திலின கமகே தெரிவித்துள்ளார்.
கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போதைப்பொருள் வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருந்த இளைஞர் ஒருவரை குற்றமற்றவர் என அறிவித்து நீதவான் விடுதலை செய்தார்.
கொம்பனித்தெருவைச் சேர்ந்த அசாத் அலிப்ராஸ் என்ற இளைஞரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சந்கேத நபரை போதைப்பொருளுடன் கைது செய்ததாக கொம்பனித்தெரு பொலிஸார் கொட்டே நீதிமன்றில் இளைஞருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
வழக்கு விசாரணைகளின் போது பொலிஸாரின் தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக காணப்பட்டதனால் வழக்கை தள்ளுபடி செய்து இளைஞரை நீதவான் நேற்று விடுவித்துள்ளார்.
பொய்யான வழக்குகளில் இளைஞர்களை சிக்க வைக்க வேண்டாம்! பொலிஸாருக்கு நீதவான் எச்சரிக்கை
Reviewed by NEWMANNAR
on
March 10, 2015
Rating:

No comments:
Post a Comment