2 ஹெலிகொப்டர்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழப்பு
ஆர்ஜென்டீனாவின் வட மேற்குப் பகுதியில் படப்பிடிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இரண்டு ஹெலிகொப்டர்கள் விபத்திற்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒரு ஹெலிகொப்டரில் பிரான்ஸ் நாட்டுப் பிரஜைகள் நிகழ்வொன்றிற்கு சென்று கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 8 பேரும் ஆஜென்டீனா நாட்டைச் சேர்ந்த இருவருமே உயிரிழந்துள்னர்.
328 அடி உயரத்திலேயே இந்த இரண்டு ஹெலிகொப்டர்களும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
2 ஹெலிகொப்டர்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழப்பு
Reviewed by NEWMANNAR
on
March 10, 2015
Rating:

No comments:
Post a Comment