குஞ்சுக்குளம் உற்பட மூன்று கிராமங்களுக்கு செல்லும் பிரதான பாதையை சீர் செய்து தருமாறு கோரிக்கை.-Photos
மன்னார் மாவட்டத்தில் கந்த டிசம்பர் மாதம் ஏற்பட்டிருந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட குஞ்சுக்குளம் கிராமம் உற்பட மூன்று கிராமங்களுக்கு செல்லும் பிரதான பாதை வெள்ளத்தினால் பாதீப்படைந்தள்ள நிலையில் தற்போது வரை குறித்த கிராமங்களுக்கான போக்குவரத்துக்கள் பாதீப்படைந்துள்ளதாக அக்கிராம மக்கள் வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.பிரிமூஸ் சிறாய்வா விடம் முறையிட்டுள்ளனர்.
இந்த மக்கள் மேலும் தெரிவிக்கையில்,,,,
கடந்த டிசம்பர் மாதம் நடுப்பகுதியளவில் மல்வத்து ஓயா பெருக்கெடுத்ததன் காரணத்தினால் மன்னார் மாவட்டத்தில் பல கிராமங்கள் வெள்ள நீரினால் மூழ்கியது.
இதன் போது மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மாதா கிராமம்,பெரிய முறிப்பு,குஞ்சுக்குளம் ஆகிய மூன்று கிராமங்களுக்கு செல்லும் பிரதான பாதைகள் வெள்ள நீரில் மூழ்கியதோடு அக்கிராம மக்கள் வெளியேர முடியாத நிலையில் காணப்பட்டனர்.
தற்போது வெள்ளம் ஏற்பட்டு சுமார் மூன்று மாதங்களாகின்ற போதும் குறித்த கிராமங்களுக்குச் செல்லும் பிரதான வீதி இது வரை சீர் செய்யப்படவும் இல்லை.போக்கு வரத்துச் சேவைகளும் இடம் பெறுவதில்லை.
குறித்த கிராமத்திற்கு செல்லும் பிரதான பாதை சீர் செய்யப்படாமையினால் அரச தனியார் போக்குவரத்துச் சேவைகள் இடம் பெறுவதில்லை.இதனால் அந்த மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.குறித்த 3 கிராமங்களையும் உள்ளடக்கி சுமார் 350 குடும்பங்கள் வரை வாழ்ந்து வருகின்றனர்.
நோயாளர்கள்,பாடசாலை மாணவர்கள்,கர்பிணித்தாய்மார்கள்,வயோதிபர்கள் என பலரும் பாதீப்படைந்துள்ளனர்.அவசர தேவைகளுக்காக மன்னாருக்கு வர முடியாத நிலையில் அந்த மக்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினரிடம் தெரிவித்துள்ளனர்.
எனவே குஞ்சுக்குளம்,மாதா கிராமம்,பெரிய முறிப்பு ஆகிய மூன்று கிராமங்களுக்கும் செல்லும் பிரதான பாதையை சீர் செய்து உரிய போக்கு வரத்து வசதிகளை மேற்கொண்டு தருமாறு குறித்த கிராம மக்கள் வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா விடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்விடையம் தொடர்பாக வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா விடம் தொடர்பு கொண்டு கேட்ட போது,,,,,
குஞ்சுக்குளம்,மாதா கிராமம் மற்றும் பெரிய முறிப்பு ஆகிய 3 கிராமங்களுக்குச்; செல்லும் செல்லும் பிரதான வீதி கடந்த வெள்ளப்பெருக்கினால் பாதீப்படைந்து சுமார் 3 மாதங்களை கடக்கின்ற போதும் குறித்த வீதியை இது வரை புனரமைப்பு செய்யவில்லை எனவும் இதனால் போக்குவரத்து சேவைகள் இடம் பெறுவதில்லை என அக்கிராம மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளனர்.
இவ்விடையம் தொடர்பில் வடமாகாணத்தின் ஏனைய அமைச்சர்களிடம் நான் உடனடியாக இவ்விடையம் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளதோடு இப்பாதையை புணரமைப்புச் செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளேன்.வெகு விரைவில் குறித்த பாதைகள் புணரமைப்பு செய்யப்படும்.என தெரிவித்தார்.
குஞ்சுக்குளம் உற்பட மூன்று கிராமங்களுக்கு செல்லும் பிரதான பாதையை சீர் செய்து தருமாறு கோரிக்கை.-Photos
Reviewed by NEWMANNAR
on
March 04, 2015
Rating:

No comments:
Post a Comment