மன்னார் எமில்நகர் பூண்டிமாதா முன்பள்ளி வருடாந்த கண்காட்சி நிகழ்வு -Photos
மன்னார் எமில்நகர் பூண்டிமாதா முன்பள்ளி வருடாந்த செயற்பாடுகளில் ஒன்றான கண்காட்சி நிகழ்வு கடந்த 28.02.2015 சனிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வானது ஓய்வுபெற்ற முன்பள்ளி உதவி கல்வி பணிப்பாளர் திரு.டு.சு.குரூஸ்அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டு மு.ப.9.00 மணி தொடக்கம் பி.ப.3.00 மனி வரை இடம்பெற்றது. ஆரம்ப நிகழ்வில்;எமில்நகர் கிராம அலுவலர், பனங்கட்டிக்கொட்டு கல்வி கலாச்சார அமைப்பு தலைவர், முன்பள்ளி ஆசிரியர்கள் கலந்துசிறப்பித்தனர்.
அத்துடன் இந்நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட ஆக்கங்கள் சிறப்பானதாகவும், வியப்பூட்டுவதாகவும்காணப்பட்டது. இந்நிகழ்வினை பல மக்கள் கண்டுகளித்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வானது சிறார்கள், பெற்றோர்கள்,ஆசிரியர்கள் மற்றும் முகாமைத்துவ குழு ஏற்பாட்டில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இம்முன்பள்ளி இயங்குவதற்கு வசதிகளற்ற நிலையிலும் இந்நிகழ்வினில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
முன்பள்ளி முகாமைத்துவ குழு,
பூண்டி மாதா முன்பள்ளி,
எமில்நகர், மன்னார்
மன்னார் எமில்நகர் பூண்டிமாதா முன்பள்ளி வருடாந்த கண்காட்சி நிகழ்வு -Photos
Reviewed by NEWMANNAR
on
March 04, 2015
Rating:
No comments:
Post a Comment