மன்/ புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் திரு ப.ஞானராஜ் அவர்கள்உதவிக் கல்விப்பணிப்பாளராக நியமனம்
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் திரு ப.ஞானராஜ் அவர்கள் மன்னார் கல்வி வலயத்தின் உதவிக்கல்விப்பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் 2013 நவம்பர் 28ம் திகதி நடைபெற்ற இலங்கை கல்வி நிர்வாக சேவை (ளSLEAS) பரீட்சையில் சித்தியடைந்து 2014 ஆடி 17ல் நடைபெற்ற நேர்முகத்தேர்வில் தெரிவுசெய்யப்பட்டு 2015 தை 12ம் திகதி இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரியாக இலங்கை கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட இவர் 2 மாத பயிற்சியின் பின்னர் 2015 – 03 – 03 இன்று மன்னார் கல்வி வலயத்தில் உதவிக்கல்விப்பணிப்பாளராக நியமிக்கப்பட்டு பதவியை ஏற்றுக்கொண்டார்.
2013ல் நடைபெற்ற இப்போட்டிப்பரீட்சையில் தமிழ் மொழி மூலத்தில் இப்பாடத்துறையில் இலங்கையிலே சித்தியடைந்தவர் இவர் ஒருவரே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இவர் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் பழைய மாணவனும் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியரும் உதைபந்தபட்ட பயிற்றுநரும் உயர்தர பிரிவின் பகுதித்தலைவராகவும் கடமையாற்றினார். இக்கல்லூரியானது இவரது பயிற்றுவித்தலில் 1999ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக தேசியமட்டத்தில் உதைபந்தாட்டத்தில் 1ம் 2ம் இடங்களை பெற்று சாதனை படைத்து வந்துள்ளது. அத்துடன் 2004ல் இவரது பயிற்றுவித்தலால் தென்கொரியா சென்று 4ம் இடத்தை பெற்றது. அது மட்டுமல்லாது இவரது முயற்சியால் இதுவரை 8 மாணவர்கள் இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியில் ஆடியுள்ளார்கள்.
இவர் இலங்கை 19 வயது தேசிய உதைபந்தாட்ட அணியின் தலைமைப்பயிற்றுவிப்பாளராக 2013ல் ஈரான் சென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார.; .இவர் ஆசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ‘டீ’ தரமுடைய அங்கீகாரம் பெற்ற பயிற்றுவிப்பாளரும் உலக மெய்வல்லுநர் சம்மேளனத்தின் “1”ம் தரமுடைய அங்கீகாரம் பெற்ற பயிற்றுவிப்பாளரும் இதரம் “11” அனுமதிப்பத்திரம் உடைய உதைபந்தாட்ட நடுவரும் இ தரம் “111” அனுமதிப்பத்திரமுடைய மெய்வல்லுநர் நடுவரும் ஆவார்.
அத்துடன் இவர் மன்னார் உதைபந்தாட்ட லீக்கின் செயலாளராகவும் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் கவுண்சில் உறுப்பினராகவும் இலங்கை சாரண சங்கத்தின் மன்னார் மாவட்ட ஆணையாளராகவும் இசமாதான நீதவானாகவும் நியமிக்கப்பட்டு சேவையாற்றி வருகின்றார்.
இவர் மெய்வல்லுநர் பயிற்றுநர் சிறப்பு பயிற்சியை இந்தியாவின் கேரளாவிலும் உதைபந்தாட்ட பயிற்றுநர் சிறப்பு பயிற்சியை மலேசியாவிலும் பெற்றுள்ளார்.
இவ்வாறான சகல திறமையையும் பொருத்தப்பாடும் கொண்ட எமது மன்னார் மாவட்ட மைந்தனை இவ்வாறான உயர் பதவியில் நியமித்துள்ளமை எமக்கு பெருமையாக உள்ளது.இவர் மன்னார் மாதோட்ட துறையாம் மாந்தையை பிறப்பிடமாக கொண்டவரும் அக்கிராமத்தை சேர்ந்த அமரர் திரு செல்வம் இ திருமதி ஜெயசோதி தம்பதிகளின் புதல்வராவார்.
இவரது இப்புதிய பணி சிறக்க மன்னார் வாழ் மக்கள் சார்பில் மனதார வாழ்த்துகின்றோம்.
தலைவர்- மாவட்ட உதைபந்தாட்ட லீக் மன்னார்
மன்/ புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் திரு ப.ஞானராஜ் அவர்கள்உதவிக் கல்விப்பணிப்பாளராக நியமனம்
Reviewed by NEWMANNAR
on
March 04, 2015
Rating:

No comments:
Post a Comment