எனக்கு எதிரான முறைப்பாட்டை துரிதமாக விசாரிக்குக-அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள்.
எனக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழவில் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டை அவசரமாக விசாரணை செய்து நாட்டு மக்களுக்கு முடிவுகளை அறிவிக்குமாறு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆணைக்குழு தலைவரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை (06) இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழவில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கு இணங்கவே அமைச்சர் றிஸாட் பதியுதீன் மேற்கண்டவாறு வேண்டு கோள் விடுத்துள்ளார்.
அத்துடன் அவ் விசாரணைக்காக தான் பூரண ஒத்துழைப்புக்களையும் வழங்க தயாராக இருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
2013 ஆம் ஆண்டு நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பாக மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியிடைந்த ஒருவரினாலேயே இம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
எனக்கு எதிரான முறைப்பாட்டை துரிதமாக விசாரிக்குக-அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள்.
Reviewed by NEWMANNAR
on
March 07, 2015
Rating:

No comments:
Post a Comment