மன்னார் மறைமாவட்டத்தின் பறப்பாங்கண்டல் பங்குத்தந்தையும் திருவுளப்பணியாளர் சபையின் முன்னாள் மாகாண முதல்வருமான அருட்பணியாளர் ஏ. சகாயநாதன் மரணம்.
மன்னார் மறைமாவட்டத்தின் பறப்பாங்கண்டல் பங்குத்தந்தையும் திருவுளப்பணியாளர் சபையின் முன்னாள் மாகாண முதல்வருமான அருட்பணியாளர் அந்தோனி சாகாயநாதன் (வயது 55) அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை(10.03.2015) திடீர் மாரடமைப்புக் காரணமாக உயிரிழந்தார்.
முருங்கன் சுண்டிக்குளிக் கிராமத்தைச் சேர்ந்த இவர் 24.08.1960ஆம் ஆண்டு பிறந்தார். 1992ஆம் ஆண்டு திருவுளப் பணியாளர் சபையில் நிரந்தர நிலையைப் பெற்ற இவர், 07.04.1994இல் திருவுளப்பணியாளர் சபைக் குருவாக மன்னார் ஆயர் மேதகு இரா. யோசேப்பு ஆண்டகை அவர்களால் திரு நிலைப்படுத்தப்பட்டார்.
1994ஆம் ஆண்டு தொடக்கம் 2008ஆம் ஆண்டு வரையான 14 ஆண்டுகள் மன்னார் மறைமாவட்டத்தின் பல்வேறு பங்குகளில் இவர் பணியாற்றினார். தேவன்பிட்டி, தோட்டவெளி, அளவக்கை, கோமரசன்குளம் ஆகிய பங்குகளில் இவர் பங்குத்தந்தையாக அரும்பணி ஆற்றினார்.
2008ஆம் ஆண்டு தொடக்கம் 2010ஆம் ஆண்டுவரை கண்டி அம்பிட்டிய திருவுளப்பணியாளர் சபையின் பெரிய குருமட அதிபராகப் பணியாற்றினார். பின்னர் 2010ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டுவரை திருவுளப்பணியாளர் சபையின் இலங்கை மாகாண அதிபராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
இப்பணிக்காலம் நிறைவடைந்த நிலையில் மீண்டும் மன்னார் மறைமாவட்டத்திற்குப் பணிபுரிய வந்த இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் திகதி மன்னார் மறைமாவட்டத்தின் புதிய பங்காகிய பறப்பாங்கண்டல் பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்றார்.
இவரது பூதவுடல் தற்போது மன்னார் ஆயர் இல்லத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நல்லடக்க ஆராதனைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.என மன்னார் ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது.
மன்னார் மறைமாவட்டத்தின் பறப்பாங்கண்டல் பங்குத்தந்தையும் திருவுளப்பணியாளர் சபையின் முன்னாள் மாகாண முதல்வருமான அருட்பணியாளர் ஏ. சகாயநாதன் மரணம்.
Reviewed by NEWMANNAR
on
March 10, 2015
Rating:

No comments:
Post a Comment