இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மன்னார் விஜயம் மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வஜயம் செய்யும் நேரத்தில் எதிர்வரும் 14 ஆம் திகதி வன்னி மற்றும் யாழ்ப்பாணத்திற்கும் தனது விஜயத்தை மேற்கொள்ளுவது எமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,,
எமது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒரு வழி பிறப்பதற்கான சந்தர்ப்பங்கள் உறுவாக்கப்பட்டுள்ளது.அந்த வகையிலே தலைமன்னார் பியருக்கு அவர் வருகை தருகின்ற போது உண்மையிலே மன்னார் மாவட்ட மக்கள் அவரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகின்றனர்.
அந்த வகையில் எமது பிரதேசத்தில் இருக்கின்ற பிரச்சினைகளை அவர் நன்கு உணர்ந்து பல தீர்வுகளை தர வேண்டும் என்று எங்களுடைய சமூகம் எதிர்பார்க்கின்றது.
எதிர்வரும் 14 ஆம் திகதி ஒரு சிறப்பு மிக்க நாளாக மன்னார் மாவட்டம் விளங்குவதால் எங்களுடைய மக்கள் இந்த விஜயத்தை பெருமையடைவது மட்டுமில்லாது எங்களுடைய மாவட்டம் உயர்வான நிலைக்கு செல்லுகின்ற அத்திவாரமாக இது அமையும் என நம்புகின்றோம்.
குறிப்பாக எங்களுடைய மீனவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.இந்திய அரசு 50 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை வழங்கியுள்ளனர்.அதற்கு நன்றி கூறுவதோடு இன்னும் வீடுகள் இல்லாது எங்களுடைய மக்கள் வாழ்;ந்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வருகை தருகின்ற போது இன்னும் கூடுதலான வீடுகளை வழங்க வேண்டும்.வீடுகள் இல்லாத எங்களுடைய மக்களுக்கு தொடர்ச்சியாக வழங்க வேண்டும்.
-எனவே எங்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளபடியால் மன்னார் மாவட்டம் இன்று மகிழ்ச்சி கொள்ளுகின்ற நிலைக்கு வந்துள்ளது.
-மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்து முதல் பெருமையை தட்டிச் சென்றவர் எங்களுடைய அதி வணக்கத்திற்கூறிய பாப்பரசர் அவர்கள்.அவருடைய புனித பாதம் எங்களுடைய மாவட்டத்தில் பட்டுள்ளது.அதே போல வல்லரசாக போகும் இந்திய நாட்டின் பிரதமர் எமது மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளமை எமது மாவட்டத்திற்கு பெருமையை ஏற்படுத்துகின்றது.
எனவே அவரை வரவேற்பதற்கு எமது மக்;கள் தயாராக வேண்டும் என்பதை கேட்டுக்கொள்ளவதோடு அவரது வருகைக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மன்னார் விஜயம் மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.
Reviewed by NEWMANNAR
on
March 10, 2015
Rating:
No comments:
Post a Comment