போலி கடவுச்சீட்டுக்கள் மற்றும் வீசாக்களுடன் 04 இலங்கையர்கள் இந்தியாவில் கைது
போலி கடவுச்சீட்டுக்கள் மற்றும் வீசாக்களுடன் 04 இலங்கையர்கள் இந்திய கியூ பிரிவு பொலிஸாரினால் சென்னையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதான நால்வரும் நேபாளத்தின் ஊடாக பிரான்ஸ் மற்றும் கனடா போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு ஆட்கடத்தல்களில் ஈடுபடுபவர்கள் என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கைதானவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என இந்திய பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த நடவடிக்கையுடன் மேலும் பலர் தொடர்புபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதுடன், இவர்கள் ஒரு வருடத்திற்கும் அதிககாலம் ஆட்கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த வலையமைப்பின் ஊடாக 50க்கும் அதிகமானவர்கள் பிரான்ஸ் மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது..
நால்வரையும் தடுத்துவைத்து விசாரணை செய்யுமாறு தமிழக பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா, இலங்கை, கியூ பிரிவு, போலி கடவுச்சீட்டுக்கள்
போலி கடவுச்சீட்டுக்கள் மற்றும் வீசாக்களுடன் 04 இலங்கையர்கள் இந்தியாவில் கைது
Reviewed by NEWMANNAR
on
April 30, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
April 30, 2015
Rating:


No comments:
Post a Comment