அண்மைய செய்திகள்

recent
-

Grass Root உதைபந்தாட்ட பயிற்சி நெறி



இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் ஆதரவுடனும் மன்னார்  மடு வலய கல்வித்திணைக்களத்தின் அனுமதியுடனும் இரு வலயங்களையும் சேர்ந்த 30 உடற்கல்வி ஆசிரியர்களுக்கான 3 நாள் உதைபந்தாட்ட Grass Root பயிற்சி நெறியானது மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் 22.04.2015 இன்று ஆரம்பமாகியது.

ஆரம்ப நிகழ்வில் மன்னார் வலயக் கல்விப்பணிப்பாளர் திரு எம் எம் சியான் அவர்களும் மன்னார் உதைபந்தாட்ட லீக் தலைவர் திரு ஜெறாட் அவர்களும் லீக் செயலாளரும் மன்னார் கல்வி வலய உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளருமாகிய திரு ப.ஞானராஜ் அவர்களும் லீக் பொருளாளர் திரு கோல்டன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இப்பயிற்சி நெறியை இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன Grass Root பணிப்பாளர் திரு சமிந்த ஸ்ரென்வோல் அவர்கள் நெறிப்படுத்துகின்றார்.

இப்பயிற்சி நெறியானது 24.04.2015 அன்று நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்
ப.ஞானராஜ்
லீக் செயலாளர்
மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்
Grass Root உதைபந்தாட்ட பயிற்சி நெறி Reviewed by NEWMANNAR on April 23, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.