மடு கல்வி வலயத்தில் உள்ள 3 பாடசாலைகளைச்சேர்ந்த மாணவர்களுக்கு அப்பியாசக்கொப்பிகள் வழங்கி வைப்பு.-Photos
மடு கல்வி வலயத்திற்குற்பட்ட மூன்று பாடாலை மாணவர்களுக்கு அப்பியாசக்கொப்பிகள் வழங்கும் நிகழ்வு இன்று(27) புதன் கிழமை காலை பாப்பாமோட்டை றோமன் கத்தோழிக்க தமிழ் கலவன் பாடசாலையில் அப்பாடசாலை அதிபர் எஸ்.பி.சேவியர் தலைமையில் இடம் பெற்றது.
'ஆசையண்ணாவின் அன்புக்கனவுகள்' அமைப்பினால் வழங்கப்பட்ட ஒரு தொகுதி அப்பியாசக்கொப்பிகள் மடு கல்வி வலயத்திற்குற்பட்ட பாப்பாமோட்டை றோமன் கத்தோழிக்க தமிழ் கலவன் பாடசாலை,திருக்கேதீஸ்வரம் இந்து கலவன் பாடசாலை,கன்னாட்டி றே.க.த.க.பாடசாலை ஆகிய 3 பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 200 மாணவர்களுக்கு குறித்த கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக தமிழ் தேசியக்கூட்டமைப்பின்
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கலந்து கொண்டார்.
அத்துடன் 'ஆசையண்ணாவின் அன்புக்கனவுகள்' அமைப்பின் மன்னார்,கிளிநொச்சி இணைப்பாளர்கள்,பாடசாலை அதிபர்கள்,கிளிநொச்சி வலய ஆசிரிய ஆலோசகர் எஸ்.செல்வரெட்ணம் ஆகியோர் இணைந்து குறித்த அப்பியாசக்கொப்பிகளை மாணவர்களுக்கு வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
மடு கல்வி வலயத்தில் உள்ள 3 பாடசாலைகளைச்சேர்ந்த மாணவர்களுக்கு அப்பியாசக்கொப்பிகள் வழங்கி வைப்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
May 28, 2015
Rating:
No comments:
Post a Comment