மாந்தை கிழக்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 349 பேருக்கு காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு.-Photos
யுத்த இடப்பெயர்வுகளின் காரணமாக தமது காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை (உறுதி) பெற்றுக்கொள்ளாத முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 349 குடும்பங்களுக்கு நேற்று(27) புதன் கிழமை காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசச் செயலகத்தில் பிரதேசச் செயலாளர் ரி.பிரிந்தாகரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சிறப்பு விருந்தினராக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் மற்றும் கௌரவ விருந்தினராக மாந்தை கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஏ.தனிநாயகம் ஆகியோர் கலந்து கொண்டு குறித்த மக்களுக்கான காணி அனுமதிப்பத்திரங்களை வைபவ ரீதியாக வழங்கி வைத்தனர்.
மாந்தை கிழக்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 349 பேருக்கு காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
May 28, 2015
Rating:
No comments:
Post a Comment