மாந்தை கிழக்கில் கிராம அலுவலகர் பிரிவுகளில் 10 இலட்சம் ரூபாய் அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைப்பு.-Photos
நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் சகல கிராம அலுவலகர் பிரிவிலும் 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் நேற்று புதன் கிழமை(27) முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாண்டியன் குளம் நட்டாங்கண்டல் ஆரம்பப்பாடசாலைக்கான சுற்று மதில் மற்றும் பாண்டியன் குளம் உள்ளக வீதி ஆகியவை தலா 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படுவதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
மாந்தை கிழக்கு பிரதேசச் செயலாளர் ரி.பிரிந்தாகரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக கலந்து கொண்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,எஸ்.வினோ நோகராதலிங்கம் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச சபையின் முன்னால் தலைவர் ஏ.தனிநாயகம் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
மாந்தை கிழக்கில் கிராம அலுவலகர் பிரிவுகளில் 10 இலட்சம் ரூபாய் அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைப்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
May 28, 2015
Rating:
No comments:
Post a Comment