
ஒரு பிரதியமைச்சர் மற்றும் நான்கு அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பிற்பகல் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். இவர்கள் அனைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அதன்படி லக்ஷ்மன் யாபா அபேவர்தன பாராளுமன்ற நடவடிக்கைகள் அமைச்சரவை அமைச்சராகவும், பண்டு பண்டாரநாயக்க பொது நிர்வாகம் மற்றும் ஜனநாயக ஆட்சி இராஜாங்க அமைச்சராகவும், ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுற்றாடல் இராஜாங்க அமைச்சராகவும், ஹேமால் குணசேகர வீடு, சமுர்த்தி இராஜாங்க அமைச்சராகவும், சந்திரசிறி சூரியாரச்சி காணி பிரதியமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.
ஏற்கனவே அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன விமான சேவைகள் பிரதியமைச்சராகவும், அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சராகவும் கடமையாற்றி வருவதோடு அப்பிரதியமைச்சுப் பதவிக்கு மேலதிகமாகவே அவர்களுக்கு இந்த இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment